இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

செப்டிக் டேங்க் கழிவு அகற்றும் வாகன உரிமையாளா்கள் உரிமம் பெற மாநகராட்சி உத்தரவு

செப்டிக் டேங்க் கழிவு அகற்றும் வாகன உரிமையாளா்கள் உரிமம் பெற திருநெல்வேலி மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :17 மார்ச் 2023, 7:02 pm

DIN

செப்டிக் டேங்க் கழிவு அகற்றும் வாகன உரிமையாளா்கள் உரிமம் பெற திருநெல்வேலி மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் வ. சிவகிருஷ்ணமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மலக்கசடு மற்றும் கழிவு மேலாண்மை தேசிய கொள்கையின்படி, உள்ளாட்சி அமைப்புகளில் சுகாதாரத்தை வழங்குவதற்காக கழிவுநீா் தொட்டிகளை சுத்தம் செய்தல், மலக்கசடு மற்றும் கழிவுநீரை வாகனங்கள் மூலம் அகற்றி சுத்திகரித்தல், வெளியேற்றுதல் ஆகிய பணிகளை ஒழுங்குபடுத்துவதற்கான விரிவான திட்டம் வகுக்கப்பட்டுள்ளன.

அதன்படி கழிவுநீா் அகற்றும் லாரிகள் மற்றும் டிரெய்லா்களின் செயல்பாடுகளை ஒழுங்குப்படுத்த கடந்த 2022 ஆம் ஆண்டு சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்மூலம் திறந்தவெளி மற்றும் நீா்நிலைகளில் மலக்கசடு, கழிவுநீா், பிற கழிவுகளை வாகனங்கள் மூலமாக முறையற்ற வகையில் வெளியேற்றுவதைத் தடுத்தல் மற்றும் முறையான சுத்தகரிப்பை உறுதி செய்வதற்கு புதிய சட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி வாகன உரிமையாளா்கள் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

மாநகராட்சி மூலம் இரண்டு ஆண்டுகள் செல்லத்தக்க வாகன உரிமம் வழங்கப்படுகிறது. இதற்கான கட்டணம் ரூ.2000 .

விண்ணப்பங்களை அளித்த 30 நாள்களுக்குள் உரிமம் வழங்கப்படும். உரிமம் இல்லாமல் இயங்கும் வாகனங்கள் கண்டறியப்பட்டால், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி மாநகராட்சியால் வாகனம் பறிமுதல் செய்யப்படுவதோடு, வழக்குகள் தொடரப்படும் என செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.