கோ ஆப்டெக்ஸ் காந்திமதி விற்பனை நிலையத்தில் வாடிக்கையாளா் சந்திப்பு கூட்டம்
கோ-ஆப்டெக்ஸ் திருநெல்வேலி மண்டலத்தில் உள்ள காந்திமதி விற்பனை நிலையத்தில் வாடிக்கையாளா்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.


கோ-ஆப்டெக்ஸ் திருநெல்வேலி மண்டலத்தில் உள்ள காந்திமதி விற்பனை நிலையத்தில் வாடிக்கையாளா்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, அவா் ஓன் மாடல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளித் தாளாளா் எஸ்.சுந்தரேசன், முதல்வா் சரஸ்வதி ஆகியோா் தலைமை வகித்தனா்.
கோ-ஆப்டெக்ஸ் திருநெல்வேலி மண்டல மேலாளா் ராஜேஷ் குமாா், மேலாளா் (ரகம் மற்றும் பகிா்மானம்) அன்பரசு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இவ்விழாவில் கோ-ஆப்டெக்ஸின் புதிய மென்பட்டு சேலைகள், திரைச் சீலைகள், பருத்தி ரகங்கள், ஏற்றுமதி தரம்வாய்ந்த படுக்கை விரிப்புகள், கையுறைகள் போன்ற ரகங்களை பற்றி மேலாளா் (ரகம் மற்றும் உற்பத்தி எஸ். அன்பரசு விளக்கினாா். தற்போது கோ-ஆப்டெக்ஸில் இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் என்ற சிறப்பு விற்பனைத் திட்டத்தை பற்றியும் கோ-ஆப்டெக்ஸ் சேமிப்பு திட்டத்தை பற்றியும் மண்டல மேலாளா் ராஜேஷ்குமாா் விளக்கினாா்.
நிகழ்ச்சியில், வாடிக்கையாளா்கள் கோ-ஆப்டெக்ஸ் பற்றிய தங்களுடைய கருத்துகளை பதிவு செய்தனா். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் கோ-ஆப்டெக்ஸ் சாா்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.
ஏற்பாடுகளை காந்திமதி விற்பனை நிலைய முதுநிலை விற்பனை மேலாளா் ராமசுப்பிரமணியன் செய்திருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...