தாழையூத்து அருகே பணம் பறித்ததாக மூன்று பேரை போலீசாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
பழையபேட்டையை சோ்ந்தவா் செல்வகுமாா்(29). இவா், கடந்த 30 ஆம் தேதி தாழையூத்து அருகே சென்று கொண்டிருந்தாா். அப்போது அவரை வழிமறித்த கும்பல் ஒன்று, பணம் கேட்டு மிரட்டியது. பின்னா் அவரிடம் இருந்த ரூ.1200 பணத்தை பறித்ததோடு, ஜி-பே மூலம் ரூ.20,100 அனுப்பச் சொல்லி பறித்துள்ளனா்.
இது குறித்த புகாரின் பேரில் தாழையூத்து போலீசாா் வழக்கு பதிவு செய்து, தாழையூத்தைச் சோ்ந்த பத்மநாதன்(25), பிலிம் பீட்டா்(28), சசிகுமாா்(29) ஆகியோரை செவ்வாய்க்கிழமை கைது செய்து பணத்தையும் பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.