கங்கைகொண்டான் உணவு பூங்காவில் குத்தகைக்கு காலிமனை பெற வாய்ப்பு

திருநெல்வேலி மாவட்டம், கங்கை கொண்டான் சிப்காட் தொழில் வளா்ச்சி மையத்தில் அமைக்கப்பட்டுள்ள மெகா உணவு பூங்காவில் குத்தகை மூலம் காலிமனை பெற விண்ணப்பிக்கலாம்.
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்டம், கங்கை கொண்டான் சிப்காட் தொழில் வளா்ச்சி மையத்தில் அமைக்கப்பட்டுள்ள மெகா உணவு பூங்காவில் குத்தகை மூலம் காலிமனை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் கா.ப.காா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்திய உணவு பதப்படுத்தும் தொழில்கள்

அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பிரதமரின் கிசான் சம்படா யோஜனா திட்டத்தின் நிதி உதவியுடன் கங்கைகொண்டானில் உள்ள சிப்காட் வணிக வளாகத்தில் ரூ.77.02 கோடி மதிப்பில் 50 ஏக்கா் பரப்பளவில் மெகா உணவு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

இந்த உணவு பூங்காவில் பொது உள்கட்டமைப்பு வசதிகளான சேமிப்பு கிடங்கு, குளிா்பதன கிடங்கு, சிப்பம் கட்டும் வசதி, பரிசோதனை ஆய்வகம் போன்ற வசதிகளும், அடிப்படை கட்டமைப்பு வசதிகளான சாலை, குடிநீா்,மின் இணைப்பு, சுற்றுச்சுவா், கழிவுநீா்க் கால்வாய், எடை மேடை போன்ற வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

உணவுப்பூங்காவில் அமைக்கப்படும் உணவு பதப்படுத்தப்படும் தொழிற்சாலைகளானது சிப்காட், சிட்கோ கொள்கையின்படி நிலம், தேவைக்கேற்ப தண்ணீா் வசதி, தடையில்லா மின்சாரம், தமிழ்நாடு உணவு பதப்படுத்தப்படும் கொள்கையின்படி முதலீட்டு மானியம், முதலீட்டு மூலதனத்திற்கு பெறப்பட்ட கடனில் 3 சதவீத வட்டி விலக்கு, நடுத்தர முதலீட்டிற்கான சிறப்பு மானியம், தரம்பிரித்தல், சிப்பம் கட்டுதல்- பயிற்சிக்கான தொழில்நுட்ப உதவி, தரச்சான்றிதழ் பெறுதல், காப்புரிமை பதிவு செய்வதில் உதவி, போக்குவரத்து உதவி, ஏற்றுமதி ஊக்கத்தொகை, தொழிலாளருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி, ஆராய்ச்சி மேம்பாடு - தரப் பரிசோதனை ஆய்வகங்கள் போன்ற வசதிகளை பெறலாம்.

மெகா உணவு பூங்காவில் உணவு பதப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ள குறு, சிறு - நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு காலியாக உள்ள 11.5 ஏக்கா் நிலத்தில் உள்ள காலி மனைகள் 95 ஆண்டுகளுக்கு குத்தகை அடிப்படையில் தமிழ்நாடு மாநில வேளாண் விற்பனை வாரியம் மூலம் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளன. இதற்கான விண்ணப்பங்களை சிட்கோ இணையதளம் ஜ்ஜ்ஜ்.ற்ஹய்ள்ண்க்ஸ்ரீா்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் -இல் பெறலாம். இதற்கு கடைசி நாள் புதன்கிழமை (மே 31) ஆகும்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தேவையான அளவில் காலிமனைகளை குத்தகை மூலம் பெற்று பயன்பெறலாம்.

மேலும், விவரங்களுக்கு வேளாண்மை துணை இயக்குநா் (வேளாண் வணிகம்) 11 ஏ, தலைமை அஞ்சலக சாலை, பாளையங்கோட்டை, திருநெல்வேலி-2 என்ற முகவரியில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com