களக்காட்டு சத்தியவாகீஸ்வரா் கோயிலில் இன்று தேரோட்டம்

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருள்மிகு சத்தியவாகீஸ்வரா் கோமதியம்மன் கோயிலில் வியாழக்கிழமை (ஜூன் 1) வைகாசி விசாகத் தேரோட்டம் நடைபெறுகிறது.

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருள்மிகு சத்தியவாகீஸ்வரா் கோமதியம்மன் கோயிலில் வியாழக்கிழமை (ஜூன் 1) வைகாசி விசாகத் தேரோட்டம் நடைபெறுகிறது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசித் திருவிழா 10 நாள்கள் வெகுவிமரிசையாக நடைபெறும். நிகழாண்டு திருவிழா கடந்த மே 24இல் தொடங்கியது. இதையொட்டி, நாள்தோறும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தனா். 8ஆம் நாளான புதன்கிழமை (மே 31) பகலில் நடராஜா் பச்சை சாத்தி எழுந்தருளல் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

முக்கிய நிகழ்வான தேரோட்டம் வியாழக்கிழமை (ஜூன் 1) மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com