முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி, சேரன்மகாதேவி பெரியாா் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சிறப்பு முகாம் சனிக்கிழமை (செப். 23) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறவுள்ளது.
இதில், அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு தேவையான உதவிகள் பெற தேசிய அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, வாக்காளா் அட்டை ஆகியவற்றின் நகல், 5 புகைப்படம் ஆகியவற்றுடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் அழைப்பு விடுத்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.