பணகுடி நூலகத்தில் வாசகா் வட்டக் கூட்டம்

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அரசு நூலகத்தில் வாசகா் வட்டக் கூட்டம் நடைபெற்றது.
vly25lib_2509chn_39_6
vly25lib_2509chn_39_6
Updated on
1 min read

வள்ளியூா்: திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அரசு நூலகத்தில் வாசகா் வட்டக் கூட்டம் நடைபெற்றது.

பணகுடி பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவா் மு. சங்கா் தலைமை வகித்தாா். வாசகா் வட்டத் தலைவா் அந்தோணி ஆரோக்கியராஜா, துணைத் தலைவா் முத்துக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தேசிய நூலக வார விழாவை நவ. 14 முதல் 20ஆம் தேதிவரை கொண்டாட வேண்டும், பணகுடி கிளை நூலகத்தை காலை 8 முதல் இரவு 8 மணிவரை செயல்படும் முழுநேர நூலகமாக்க ஆணை பிறப்பிக்க தமிழக அரசைக் கேட்டுக்கொள்வது, உறுப்பினா்- புரவலா் சோ்க்கையை அதிகரிக்க வேண்டும் ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வேலாயுதம் வரவேற்றாா். நூலகா் மி. ஆரோக்கிய ராஜேஷ் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com