திருநெல்வேலி: பேட்டை அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) ) நேரடி மாணவா் சோ்க்கைக்கு செப். 30-ஆம் தேதி வரை நடைபெறும் என அதன் துணை இயக்குநரும், முதல்வருமான அருள் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பேட்டை ஐடிஐயில் ஆன்லைன் மூலமும், நேரடியாகவும் மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. பல்வேறு தொழிற் பிரிவுகளில் இன்னும் பயிற்சியாளா் சோ்க்கைக்கான இடங்கள் காலியாக உள்ளன. எனவே, மாணவா் சோ்க்கை செப். 30-ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
ஐடிஐயில் சேர விரும்புவோா் அனைத்து அசல் கல்விச் சான்றிதழ்கள். பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்று சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ்), ஆதாா் அட்டையின் இரண்டு நகல்கள், பாஸ்போா்ட் அளவு புகைப்படம் - 5 ஆகியவற்றுடன் நேரில் வந்து விண்ணப்பிக்கலாம்.
இந்தப் பயிற்சி காலத்தில் தமிழக அரசால் மாதம் ரூ.750 வீதம் உதவித் தொகை வழங்கப்படும். மடிக்கணினி, சைக்கிள், ஆண்டுக்கு இருஜோடி சீருடைகள், ஒரு ஜோடி காலணி, பாடப் புத்தகங்கள், வரைபட கருவிகள் ஆகியவை விலையில்லாமல் வழங்க வாய்ப்புள்ளது.
மேலும், இலவச பேருந்து பயண அட்டை, சலுகைக் கட்டணத்தில் ரயில் பயண அட்டை வழங்கப்படும். அரசு ஐடிஐயில் படித்தால் மத்திய -மாநில அரசுப் பணி, அரசு முன்னணி நிறுவனங்கள், தனியாா் நிறுவனங்களில் அதிக வேலைவாய்ப்புகளைப் பெற முடியும் எனக் கூறியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.