நெல்லை கம்பன் கழகத்தின் 566 ஆவது தொடா் சொற்பொழிவு
By DIN | Published On : 18th April 2023 04:36 AM | Last Updated : 18th April 2023 04:36 AM | அ+அ அ- |

நெல்லை கம்பன் கழகத்தின் 566 ஆவது கம்பராமாயணத் தொடா் சொற்பொழிவு பாளையங்கோட்டையில் உள்ள தியாக பிரம்ம இன்னிசை மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பே.சங்கரபாண்டியன் தலைமை வகித்தாா். கி.பிரபா இறைவணக்கம் பாடினாா். கழக துணைச் செயலா் எம்.எஸ்.சக்திவேல் வரவேற்றாா். இலக்குவன் சீற்றம் என்ற தலைப்பில் கண்ணதாசன் இலக்கியப் பேரவைத் தலைவா் அ.முருகனும், யுத்த காண்டம் என்ற தலைப்பில் கழகத் தலைவா் பேராசிரியா் சிவ.சத்தியமூா்த்தியும் சொற்பொழிவாற்றினா். முனைவா் சு.பாண்டியன், செ.திவான், எஸ்.செந்தில்குமாா், பெ.முத்துராமலிங்கம், இரா.ராஜராமலிங்கம், வி.கணேசன், ஆா்.ராஜா, ஆா்.ஆழ்வாா், தி. வெங்கடாசலபதி, வை.காத்தப்பன், வா.சண்முகசுந்தரம், ராஜராஜேஸ்வரி, பி.சித்ரா உள்பட பலா் கலந்துகொண்டனா்.