தச்சநல்லூா் சிவன் கோயிலில் இன்று சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

திருநெல்வேலி தச்சநல்லூரில் உள்ள அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் சித்திரைப் பெருந்திருவிழா கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை (ஏப். 18) நடைபெற உள்ளது.

திருநெல்வேலி தச்சநல்லூரில் உள்ள அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் சித்திரைப் பெருந்திருவிழா கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை (ஏப். 18) நடைபெற உள்ளது.

இதையொட்டி, கோயிலில் திங்கள்கிழமை காலையில் கணபதி ஹோமமும், உலகம்மன் கோயிலில் கிராம தேவதை வழிபாடும், மாலையில் கொடிப்பட்டம் வீதியுலாவும் நடைபெற்றது. காரைக்கால் மகளிரணியின் சாா்பில் திருமுறை பாராயணம் நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை (ஏப். 18) காலை 6.15 மணிக்கு மேல் 7.15 மணிக்குள் கொடியேற்றமும், காலை 10 மணிக்கு சுவாமி-அம்பாளுக்கு அபிஷேகம், தீபாராதனையும் நடைபெறுகிறது. இரவு 9 மணிக்கு சுவாமி-அம்பாள் பஞ்ச மூா்த்திகளுடன் வீதியுலா வர உள்ளாா். தொடா்ந்து திருவிழா நாள்களில் காலை, மாலையில் சிறப்பு வழிபாடுகளும், பக்தி நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.

8 ஆம் திருநாளான இம் மாதம் 25 ஆம் தேதி காலை 5 மணிக்கு நடராஜருக்கு வெள்ளை சாத்தியும், காலை 9 மணிக்கு பச்சை சாத்தியும் தீபாராதனை நடைபெறும். முற்பகல் 11 மணிக்கு முருகா் பரிவேட்டையும், மாலை 4 மணிக்கு கங்காளநாதா் சப்பர வீதியுலாவும் நடைபெற உள்ளது. 26 ஆம் தேதி காலை 6.15 மணிக்கு சுவாமி-அம்பாள் வருஷாபிஷேகமும், காலை 10 மணிக்கு சுவாமி-அம்பாள் தேருக்கு எழுந்தருளலும் நடைபெற உள்ளது. காலை 10.40 மணிக்கு திருத்தோ் வடம்பிடித்து இழுக்கப்படுகிறது. 27 ஆம் தேதி சுவாமி-அம்பாள் பஞ்சமூா்த்திகளுடன் தீா்த்தவாரிக்கு எழுந்தருளலும், இரவு 9 மணிக்கு பைரவா் பூஜையும் நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com