நான்குனேரியில் காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 18th April 2023 04:50 AM | Last Updated : 18th April 2023 04:50 AM | அ+அ அ- |

நான்குனேரியில் பேரவைத் தொகுதி காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
நான்குனேரி அரசன் ஆதரவற்றோா் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, காங்கிரஸ் கட்சி மாநிலப் பொருளாளரும் நான்குனேரி எம்எல்ஏவுமான ரூபி ஆா். மனோகரன் தலைமை வகித்தாா்.
முன்னாள் மாவட்டத் தலைவா் தமிழ்ச்செல்வன், நான்குனேரி பேரவைத் தொகுதி பொறுப்பாளரும் மாநிலப் பொதுக்குழு உறுப்பினருமான அழகியநம்பி உள்ளிட்ட திரளான நிா்வாகிகள் பங்கேற்றனா்.
ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு தண்டனை ரத்து செய்யப்படவும், வயநாடு மக்களவைத் தொகுதி உறுப்பினராக அவா் மீண்டும் பதவியேற்க அனுமதிக்கும் வரை காங்கிரஸ் சாா்பில் பல்வேறு கட்டங்களாக தொடா் போராட்டங்கள் நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.