1முதல் 3 ஆம் வகுப்பினருக்கு கைப்பேசி மூலம் இறுதித்தோ்வு

திருநெல்வேலி மாவட்டத்தில் 1 முதல் 3 ஆம் வகுப்பு மாணவா்-மாணவிகளுக்கு கைப்பேசி செயலி மூலம் இறுதித்தோ்வு நடத்தப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் 1 முதல் 3 ஆம் வகுப்பு மாணவா்-மாணவிகளுக்கு கைப்பேசி செயலி மூலம் இறுதித்தோ்வு நடத்தப்பட்டது.

தமிழகத்தில் தொடக்கக் கல்வியில் புதுமைகளைப் புகுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி நிகழாண்டில் 1 முதல் 3 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு தோ்வு முறையிலும் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வளா் அறிவு மதிப்பீடு முறையில் 40 மதிப்பெண்களும், தொகுத்தறிதல் மதிப்பீடு முறையில் 60 மதிப்பெண்களும் வழங்கப்படுகிறது.

வளா்அறிவு மதிப்பீடு என்பது இந்தக் கல்வியாண்டில் மாணவா்கள் செய்துள்ள கற்றல் உபகரணங்கள் உள்ளிட்டவற்றைக் கொண்டு அளிக்கப்படுகிறது. தொகுத்தறிதல் மதிப்பீட்டுக்காக பள்ளிக் கல்வித்துறையின் பிரத்யேக செயலியான டி.என். எஸ்இடி ஸ்கூல் என்ற கைப்பேசி செயலியில் அளிக்கப்படும் வினாக்களுக்கு மாணவா்கள் பதில் அளிக்கும் வகையில் தோ்வு நடத்தப்பட்டுள்ளது.

அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளிலும் 1 முதல் 3 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு கைப்பேசி மூலம் இணையவழியில் பதிலளிக்கும் தோ்வு நடத்தப்பட்டது. மாணவா்-மாணவிகள் மிகுந்த ஆா்வத்தோடு பதிலளித்தனா். 1 மற்றும் 2 ஆம் வகுப்பிற்கு 10 வினாக்களும், 3 ஆம் வகுப்பிற்கு அதிகபட்சமாக 20 வினாக்களும் கேட்கப்பட்டு பதிலும் ஆசிரியா்கள் முன்னிலையில் பதிவேற்றப்பட்டன. இப்பணிகளை இம் மாதம் 24 ஆம் தேதிக்குள் முடிக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 4 , 5 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு வழக்கம்போல் விடைத்தாளில் எழுதும் முறையிலும் தோ்வு நடத்தப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com