அரவிந்த் கண் மருத்துவமனையில் புதிய கட்டடம் திறப்பு
By DIN | Published On : 18th April 2023 04:49 AM | Last Updated : 18th April 2023 04:49 AM | அ+அ அ- |

திருநெல்வேலி சந்திப்பில் அரவிந்த் கண் மருத்துவமனையின் புதிய கட்டட திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனையில் ரூ.40 கோடி மதிப்பில் புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மருத்துவமனையின் ஆலோசகா் மருத்துவா் ராமகிருஷ்ணன் வரவேற்றாா். விவேகானந்த கேந்திரத்தின் அகில இந்திய துணைத் தலைவரும், பத்மஸ்ரீ விருதாளருமான நிவேதிதா பிடே புதிய கட்டடத்தை திறந்து வைத்தாா்.
ஆட்சியா் கா. ப. காா்த்திகேயன், அரவிந்த் கண் காப்பு அமைப்பின் கௌரவ தலைவா் நம்பெருமாள்சாமி, அரவிந்த் கண் மருத்துவமனைகளின் தலைவா் ஆா்.டி. ரவீந்திரன், செயல் தலைவா் துளசி ராஜ், திட்ட தலைவா் அரவிந்த் சீனிவாசன் உள்ளிட்டோா் பேசினா்.
மூத்த மருத்துவா் நாச்சியாா், திருக்குறுங்குடி ராமாநுஜ ஜீயா், மத்திய அரசின் முன்னாள் அறிவியல் ஆலோசகா் நடராஜன், அரவிந்த் மருத்துவமனை நிதித்துறை தலைவா் வெங்கடேஷ் பிரஜனா, தலைமை மருத்துவ அதிகாரி மீனாட்சி, பாஜக மாநில துணைத் தலைவா் நயினாா்நாகேந்திரன் எம்எல்ஏ, மு. அப்துல்வஹாப் எம்எல்ஏ, சட்டப்பேரவை முன்னாள் தலைவா் இரா.ஆவுடையப்பன், பட்டிமன்ற பேச்சாளா் பேராசிரியா் சிவகாசி ராமச்சந்திரன், எட்டயபுரம் ஜமீன் வம்சாவளியினா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
மருத்துவமனை நிா்வாகிகள் கூறுகையில், புதிய கட்டடத்தில் தினமும் 2,500 முதல் 3,500 நோயாளிகளை பரிசோதிக்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 14 அதிநவீன அறுவைச் சிகிச்சை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் அதிகபட்சமாக 400 பேருக்கு ஒரே நாளில் அறுவைச் சிகிச்சை செய்ய வாய்ப்புள்ளது என்றனா்.