ரமலான் பண்டிகையை முன்னிட்டு மேலப்பாளையம் கால்நடை சந்தையில் திங்கள்கிழமை ஏராளமான மாடுகள் விற்பனைக்காக குவிந்தன.
தென் மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற கால்நடை சந்தைகளில் மேலப்பாளையம் கால்நடை சந்தையும் ஒன்றாகும். இங்கு வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் மாடுகளுக்கான சந்தையும், செவ்வாய்க்கிழமைகளில் ஆடுகளுக்கான சந்தையும் கூடுகிறது. இங்கு விழாக்காலங்களில் கோடிக்கணக்கில் ஆடு, மாடுகள் விற்பனை நடைபெறுவது வழக்கம்.
இந்த வார இறுதியில் ரமலான் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், இந்தச் சந்தையில் திங்கள்கிழமை ஏராளமான மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு, அதிகபட்சமாக ரூ.60 ஆயிரம் வரை விலை போயின. திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, மதுரை, கன்னியாகுமரி, கேரளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகள் மாடுகளை வாங்கிச் சென்றனா்.