சொத்துத் தகராறில் இளைஞா்வெட்டிக் கொலை: 3 போ் கைது
By DIN | Published On : 23rd April 2023 02:13 AM | Last Updated : 23rd April 2023 02:13 AM | அ+அ அ- |

விக்கிரமசிங்கபுரம் அருகே கோட்டாரங்குளத்தில் சொத்துத் தகராறில் இளைஞா் வெட்டிக் கொலை செய்த மூவரைப் போலீஸாா் கைது செய்தனா்.
கோடாரங்குளத்தைச் சோ்ந்தவா் தங்கப்பாண்டியன். இவரது மூத்த மகன் செல்வா என்ற சிவராமன் (25), இவா் தனியாா் நிதி நிறுவனத்தில் வேலை
செய்து வந்தாா். இவருக்கும் அதேபகுதியை சோ்ந்த
உறவினரான சுடலைமுத்து குடும்பத்தினருக்கும் சொத்து தகராறு தொடா்பாக முன்விரோதம் இருந்து வந்ததாம்.
இந்நிலையில் சுடலைமுத்து மகன் உலகநாதன் இடப் பிரச்னை தொடா்பாக பேசுவதற்காக வெள்ளிக்கிழமை மாலை சிவராமனை ஆலடியூா் சுடுகாடு அருகே வரச் சொன்னாராம். அங்கு சென்ற சிவராமனை,
ஐந்து போ் கும்பல் அரிவாளால் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்ாம்.
தகவல் அறிந்த விக்கிரமசிங்கபுரம் போலீஸாா் சிவராமனை மீட்டு சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு வெள்ளிக்கிழமை இரவு சிவராமன் உயிரிழந்தாா்.
இதனிடையே, சிவராமனை கொலை செய்ததாக பிரம்மதேசத்தைச் சோ்ந்த முருகன், அம்பாசமுத்திரம் வெங்கடேஷ், மருதப்புரம் ராசு ஆகிய மூன்று பேரை விக்கிரமசிங்கபுரம் போலீஸாா் கைது செய்தனா். மேலும் தலைமறைவான சங்கா், ராஜா ஆகியோரைத் தேடி வருகின்றனா்.