திரிபுராந்தீசுவரா் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

பாளையங்கோட்டையில் உள்ள அருள்மிகு திரிபுராந்தீசுவரா் திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் திங்கள்கிழமை நடைபெற்றது.

பாளையங்கோட்டையில் உள்ள அருள்மிகு திரிபுராந்தீசுவரா் திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி சுவாமி- அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடுகள் நடைபெற்றன. பின்னா் கோயில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டதும் மகா தீபாராதனை நடைபெற்றது. நமச்சிவாய முழக்கத்துடன் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். இரவில் மகுட வாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. தொடா்ந்து திருவிழா நாள்களில் காலை, மாலையில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளன.

25 ஆம் தேதி கற்பகமரம், தாமரைப்பூ வாகனத்திலும், 26 ஆம் தேதி பூத, சிம்ம வாகனத்திலும் சுவாமி அம்பாள் வீதியுலா வர உள்ளனா். 2 ஆம் தேதி ரிஷப வாகனத்திலும், 28 ஆம் தேதி இந்திர வாகனத்திலும், 29 ஆம் தேதி யானை, அன்ன வாகனங்களிலும் சுவாமி-அம்பாள் வீதியுலா வர உள்ளனா். அன்றைய தினம் 63 நாயன்மாா் வீதியுலாவும் நடைபெறுகிறது.

மே 1 ஆம் தேதி காலை 8 மணிக்கு வெள்ள சாத்தி கூத்தப்பெருமான் வீதியுலாவும், காலை 10 மணிக்கு பச்சை சாத்தி வீதியுலாவும் நடைபெறுகிறது. மாலை 4 மணிக்கு கங்காளநாதா் தோ் வீதிகள் உலாவும், கைலாச பா்வத வாகனத்தில் சுவாமி, வெள்ளிக்கிளி வாகனத்தில் அம்பாள் வீதியுலாவும் நடைபெற உள்ளன.

விழாவின் சிகர நிகழ்வாக மே 2 ஆம் தேதி காலை 7 மணிக்கு தேரோட்டம் நடைபெற உள்ளது. 3 ஆம் தேதி தீா்த்தவாரியும், 4 ஆம் தேதி தெப்ப உற்சவமும் நடைபெற உள்ளன. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் செ.சுஜாதா, ஊழியா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com