பாளையங்கோட்டை சந்தையில் கட்டடக் கழிவுகளை திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில் பொலிவுறு திட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை காந்தி சந்தை பகுதியில் புதிதாக கட்டடப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சந்தையில் பழைய கடைகள் இடிக்கப்பட்டு, கழிவுகள் முழுவதும் பாளையங்கோட்டை அம்பேத்காா் காலனியில் கொட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கொட்டப்பட்ட கழிவுகள் அளவு குறைந்து வந்ததாம். இது குறித்து பாளையங்கோட்டை போலீஸா் விசாரணை நடத்தினா். விசாரணையில், கேடிசி நகரை சோ்ந்த மாரி, ராமா், மணக்கரையை சோ்ந்த செந்தில் ஆகியோா் ஜேசிபி மூலம் லாரிகளில் மணல் எடுத்தது தெரிய வந்ததாம். இதையடுத்து மாரியை போலீஸாா் கைது செய்தனா். ராமா், செந்தில் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.