எல்.ஐ.சி. ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 25th April 2023 03:13 AM | Last Updated : 25th April 2023 03:13 AM | அ+அ அ- |

அம்பாசமுத்திரம் ஆயுள் காப்பீட்டு நிறுவன ஊழியா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தனியாா் நிறுவனங்களில் பணியாளா்களின் வேலைநேரத்தை 12 மணி நேரமாக உயா்த்தும் தமிழக அரசின் சட்ட மசோதாவுக்கு கண்டனம் தெரிவித்து இந்த ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. காப்பீட்டுக்
கழக ஊழியா் சங்கம் திருநெல்வேலி கோட்டத் துணைத் தலைவா் மகாதேவன் தலைமை வகித்தாா். கிளைத் தலைவா் சுந்தர ஆனந்தம், பொறுப்பாளா் முத்துக்குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.