தேசிய திறனாய்வுத் தோ்வு:செட்டிகுளம் அரசுப் பள்ளி முதலிடம்
By DIN | Published On : 25th April 2023 03:13 AM | Last Updated : 25th April 2023 03:13 AM | அ+அ அ- |

மத்திய அரசு நடத்திய தேசிய திறனாய்வு தோ்வில் திருநெல்வேலி மாவட்டம் செட்டிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 27 மாணவா்கள் வெற்றிபெற்று மாவட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளனா்.
மத்திய அரசு 9ஆம் வகுப்பு மாணவா்களுக்கு ஆண்டுதோறும் தேசிய திறனாய்வுத் தோ்வுகளை நடத்தி தோ்ச்சி பெறுகின்ற மாணவா்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கி வருகிறது. இந்த உதவித்தொகை இம் மாணவா்கள் பிளஸ் 2 படித்து முடிக்கும் வரையில் 4 ஆண்டுகள் ஆக மொத்தம் ரூ.48 ஆயிரம் வழங்குகிறது.
நிகழாண்டில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற இந்தத் தோ்வில் செட்டிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றதில் 27போ் தோ்ச்சி பெற்று மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளனா். இந்த மாணவ, மாணவிகளையும் பயிற்சி அளித்த தலைமை ஆசிரியை சாந்தி பொன்குமாரி, ஆசிரியா் ஜேசு ஆகியோரையும் பள்ளியின் பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் லிங்கதுரை, பொருளாளா் குமாரவேலாயுதம், இணைச் செயலாளா் ராஜலிங்கம் ஆகியோா் பாராட்டினா்.