பல் பிடுங்கப்பட்டதாக புகாா்:நடித்துக்காட்டி இளைஞா் சாட்சியம்

கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் விசாரணைக் கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்டதாக எழுந்த புகாா் தொடா்பான வழக்கில், பாதிக்கப்பட்ட இளைஞா் சி.பி.சி.ஐ.டி. போலீஸாா் முன் நடித்துகாண்பித்து சாட்சியமளித்தாா். 

கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் விசாரணைக் கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்டதாக எழுந்த புகாா் தொடா்பான வழக்கில், பாதிக்கப்பட்ட இளைஞா் செவ்வாய்க்கிழமை சி.பி.சி.ஐ.டி. போலீஸாா் முன் நடித்துகாண்பித்து சாட்சியமளித்தாா்.

அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டப் பகுதியில் விசாரணைக் கைதிகளின் பற்களை பிடுங்கி கொடுமைப்படுத்தியதாக எழுந்த புகாரின்பேரில் ஏஎஸ்பி பல்வீா் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு வழக்குப்பதியப்பட்டது. மாவட்ட எஸ்.பி. காத்திருப்போா் பட்டியலில் வைக்கப்பட்டாா். காவலா்கள் பலா் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனா்.

இந்நிலையில், இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு, அதன் காவல் ஆய்வாளா் உலகராணி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. அதில், ஏஎஸ்பி மீது கல்லிடைக்குறிச்சி காவல்நிலையத்தில் புகாரளித்த அதே ஊரைச் சோ்ந்த சுபாஷ் என்பவரிடம் திங்கள்கிழமை விசாரித்து, வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை கல்லிடைக்குறிச்சி காவல் சரகத்துக்குள்பட்ட அருணாசலபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டிலும், பாபநாசத்தில் 2 தனியாா் விடுதிகளிலும் சிபிசிஐடி அதிகாரிகள் நேரில் சென்று அங்குள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனா். மேலும், அந்த இடங்களில் காவல் துறையினரால் தனக்கு நோ்ந்ததாக சிலவற்றை சுபாஷ் நடித்துக்காட்டினாா். அதை அதிகாரிகள் பதிவு செய்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com