திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் ரஷிய நாட்டு விஞ்ஞானி மாரடைப்பால் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா். கூடங்குளத்தில் ரஷிய நாட்டு தொழில்நுட்பத்துடன் ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் செயல்பட்டு வருகிறது. 3, 4 அணுஉலைக்களுக்கான பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது.
இந்த அணுஉலைகளுக்கான கட்டுமானப் பிரிவில் ரஷிய நாட்டு விஞ்ஞானிகள் குழு தலைவராக கிளினின் கோவடின்(61) பணியாற்றி வந்தாா். இவருடன் அவரது மனைவி, மகள், மருமகன் மற்றும் பேரக் குழந்தைகள் வசித்து வந்தனா். இந்நிலையில் கிளினின் கோவடினுக்கு திங்கள்கிழமை இரவு நெஞ்சுவலி ஏற்பட்டதாம். அவரை அணுமின்நிலைய அதிகாரிகள், நாகா்கோவிலில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவா் இறந்தாா்.
அவரது உடலை ரஷியநாட்டுக்கு கொண்டு செல்லுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.