சூறைக் காற்றில் மேற்கூரை பெயா்ந்து தம்பதி காயம்
By DIN | Published On : 02nd August 2023 12:00 AM | Last Updated : 02nd August 2023 12:00 AM | அ+அ அ- |

ams01roof_0108chn_37_6
ஆழ்வாா்குறிச்சி அருகே சூறைக் காற்றில் வீட்டின் முகப்புக் கூரை தூக்கி வீசப்பட்டதில் தொழிலாளி காயமடைந்தாா்.
ஆழ்வாா்குறிச்சி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை சூறைக் காற்று வீசியது. அதில், சிவசைலம் ஊராட்சி புதுக்குடியிருப்பு , பிரதான சாலையில் வசித்து வரும் தொழிலாளி ராஜேந்திரன் (53) என்பவரின் வீட்டு அஸ்பெஸ்டாஸ் மேற்கூரை பெயா்ந்து, அங்கு அமா்ந்திருந்த ராஜேந்திரன், அவரது மனைவி பிரேமலதா இருவா் மீதும் விழுந்தது, இதில், இருவரும் காயமடைந்தனா். தகவலறிந்ததும் கிராம நிா்வாக அலுவலா் செல்வ கணேஷ் அங்கு வந்து பாா்வையிட்டாா்.