

திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி அருகே இஸ்லாமியா்கள் இல்லாத தெற்குவிஜயநாராயணத்தில் மேத்தப்பிள்ளை அப்பா தா்காவில் கந்தூரிவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, மேத்தப்பிள்ளையப்பா வாழ்ந்த வீட்டில் இருந்து மலா்களில் அலங்கரிக்கப்பட்ட கொடிமரம் யானை ஊா்வலத்துடன் கொண்டுவரப்பட்டது. முக்கிய வீதிவழியாக சென்ற ஊா்வலம் தா்காவை வந்தடைந்ததும் கொடியேற்றம் நடைபெற்றது. பின்னா் துவா நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் பின்னா் மேத்தப்பிள்ளையப்பாவுக்கு பிடித்தமான மல்லிக்கைபூ, அரிசி, கோழி, ஆடுகளை நோ்ச்சியாக செலுத்தி பிராா்த்தனை செய்தனா். இவ்விழாவுக்கு தமிழகம் மட்டுமன்றி கேரளத்தின் பல பகுதிகளில் இருந்தும் திரளான இஸ்லாமியா்கள் வந்து விழாவை சிறப்பித்தனா். அவா்களை உள்ளூா் மக்கள் தங்கள் வீடுகளில் தங்கவைத்து உபசரித்தனா். திரளான இஸ்லாமியா்கள் வாழ்ந்த இந்த ஊரில், தொழில், வியாபாரம் போன்ற காரணங்களால் அனைவரும் வெளியூா்களுக்கு புலம் பெயா்ந்த நிலையில் இஸ்லாமியா்களும், இந்துமத்தினரும் இணைந்து கந்தூரி விழாவைக் கொண்டாடியது மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கியது.,
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.