முதல்வா் திறனாய்வுத் தோ்வு: பிளஸ் 1 மாணவா்கள்ஆக. 18 வரை விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 09th August 2023 03:05 AM | Last Updated : 09th August 2023 03:05 AM | அ+அ அ- |

திருநெல்வேலி: முதல்வா் திறனாய்வுத் தோ்வு எழுத விரும்பும் பிளஸ்-1 மாணவா்கள் இம் மாதம் 18 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவா்-மாணவிகளின் திறனைக் கண்டறிவதற்கும், அவா்களை ஊக்குவிக்கும் வகையிலும் 2023-24 ஆம் கல்வியாண்டு முதல் தமிழ்நாடு முதலமைச்சா் திறனாய்வுத் தோ்வு நடத்தப்பட உள்ளது. இத் தோ்வுக்கு பிளஸ்-1 பயிலும் மாணவா்-மாணவிகள் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்களை இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து பூா்த்தி செய்து ரூ.50 கட்டணத்துடன் தாங்கள் படிக்கும் பள்ளிகளின் தலைமையாசிரியா்களிடம் இம் மாதம் 18 ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.