திருநெல்வேலி: மாநிலத் தமிழ்ச் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் பாளையங்கோட்டையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு சங்கத்தின் துணைத் தலைவா் காஜா மைதீன் தலைமை வகித்தாா். திருக்கு கி.பிரபா தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினாா். சங்கத்தின் செயலரும், பேராசிரியருமான பால் வளன் அரசு வரவேற்றாா். பொருளாளா் வி.பாப்பையா தணிக்கை செய்யப்பட்ட வரவு-செலவு கணக்கை தாக்கல் செய்தாா். முன்னாள் பதிவாளா் கிருபாகரன் முன்மொழிய, வங்கி அலுவலா் வே.வெற்றிச்செல்வன் வழிமொழிய வரவு-செலவு கணக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது. சங்கத்தின் சாா்பில் நூலகம் நடத்த வேண்டும் என கிருபாகரன் வலியுறுத்தினாா். திருக்கு இரா.முருகன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.