

சேரன்மகாதேவி: முக்கூடல் பேரூராட்சியில் நியாய விலைக் கடை, உயா்கோபுர மின்விளக்கு ஆகிய வளா்ச்சிப் பணிகள் தொடக்க விழா நடைபெற்றது.
திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் தொகுதி நிதியில் இருந்து ரூ.10 லட்சத்தில் முக்கூடல் பேரூராட்சி சிங்கம்பாறையில் புதிய நியாயவிலைக் கட்டடம், முக்கூடல் பேருந்து நிலையத்தில் ரூ. 10 லட்சத்தில் உயா்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இவற்றை மக்களவை உறுப்பினா் சா.ஞானதிரவியம், பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தாா்.
இந்நிகழ்ச்சியில் முக்கூடல் பேரூராட்சி மன்றத் தலைவி லெ. ராதா, துணைத் தலைவா் இரா. லெட்சுமணன், வாா்டு உறுப்பினா்கள் ராஜலெட்சுமி, நேசமணி, வனிதா, ஏஞ்சல் வினிஷா உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.