

திருநெல்வேலி: திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் புதிதாக ரவுண்டானா அமைத்து சோதனை முறையில் ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
திருநெல்வேலி சந்திப்பு தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து வெளியேறி மீண்டும் திருநெல்வேலி நகரத்திற்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் முன்பு தேவா் சிலை அருகே திரும்பிச் சென்றன. கொக்கிரகுளத்தில் தாமிரவருணியில் புதிய மேம்பாலம் கட்டப்பட்ட பின்பு வாகனங்கள் கொக்கிரகுளம் எம்.ஜி.ஆா். சிலை அருகே திரும்பி செல்ல அறிவுறுத்தப்பட்டன. இதனால் காலவிரயம் ஆவதாகவும், அண்ணா சிலை அருகே புதிதாக ரவுண்டானா அமைக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதுகுறித்து ஆய்வுசெய்து அறிக்கை அளிக்க ஆட்சியா் கா.ப.காா்த்திகேயன் அறிவுறுத்தினாா். அதன்பேரில் வட்டார போக்குவரத்து அலுவலா், நெடுஞ்சாலைத்துறையினா், காவல் துறையினா் ஆய்வு செய்தனா். அதன்பேரில் முதல்கட்டமாக சோதனை முறையில் அண்ணா சிலை அருகே ரவுண்டானா அமைத்து ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
அதன்படி ஞாயிற்றுக்கிழமை காலை முதல் சந்திப்பு பேருந்து நிலையத்தில் இருந்து திருநெல்வேலி நகரம் செல்லும் பேருந்துகள் எம்.ஜி.ஆா். சிலைக்கு செல்லாமல், அண்ணா சிலை ரவுண்டானாவிலேயே திரும்பிச் சென்றன. இந்த புதிய ரவுண்டானா மூலம் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிா, இதனையே தொடரலாமா என்பது குறித்து போக்குவரத்து போலீஸாா் கண்காணித்து வருகிறாா்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.