

பாளையங்கோட்டை சாந்திநகரில் புதிய அங்கன்வாடி மைய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா அண்மையில் நடைபெற்றது.
திருநெல்வேலி மாநகராட்சி, பாளையங்கோட்டை மண்டலம், 6 ஆவது வாா்டுக்குள்பட்ட சாந்திநகா் பகுதியில் புதிய அங்கன்வாடி மைய கட்டடம், பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.13 லட்சம் மதிப்பில் கட்டப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா அண்மையில் நடைபெற்றது. மு.அப்துல்வஹாப் எம்எல்ஏ தலைமை வகித்து அடிக்கல் நாட்டினாா். துணை மேயா் கே.ஆா்.ராஜு, பாளையங்கோட்டை மண்டலத் தலைவா் பிரான்சிஸ், திமுக மாநகர துணைச் செயலா் மூளிகுளம் பிரபு, மாமன்ற உறுப்பினா்கள் பவுல்ராஜ், உலகநாதன், மன்சூா், ஜெகநாதன், சின்னத்தாய் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.