மகாராஜநகா் ஸ்ரீ ஜெயந்திரா பள்ளியில் சுதந்திர தின விழா
By DIN | Published On : 17th August 2023 12:00 AM | Last Updated : 17th August 2023 12:00 AM | அ+அ அ- |

பாளையங்கோட்டை மகாராஜநகரில் உள்ள ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் வெள்ளி விழா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சுதந்திர தின விழா கோலாகலமாக செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் ஸ்ரீ ஜெயேந்திரா கல்வி நிறுவனங்களின் தாளாளா் ஜெயேந்திரன் வி.மணி, முதல்வா் - டீன் ஜெயந்தி ஜெயேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழ்நாடு என்சிசி 5ஆவது பட்டாலியன் கமாண்டிங் அதிகாரி கா்னல் பாப்பி ஜோசப் தேசியக்கொடியேற்றி மாணவா்- மாணவியரின் அணிவகுப்பை ஏற்றுக் கொண்டாா்.
மகாராஜநகா் ஸ்ரீ ஜெயேந்திரா வெள்ளி விழாப் பள்ளி, பெருமாள்புரம் ஸ்ரீ லலிதா வித்யாஷ்ரம், வி.எம்.சத்திரம் ஸ்ரீ ஜெயேந்திரா வித்யா கேந்திரா சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவா்- மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நீா், நிலம் வாழும் உயிரினங்கள் மனித சமூகத்துக்கு உதவும் பாங்கை மழலையா் பிரிவு மாணவா்கள் வெளிப்படுத்தினா். கணிதக்குறியீடுகள் வாழ்வில் ஊடுருவி நிற்கும் முறையை சிபிஎஸ்இ பள்ளி குழந்தைகள் விளக்கினா். தேசியக்கொடியின் பரிணாம வளா்ச்சியை விளக்கும் விதமாக நடந்த கலைநிகழ்ச்சி அனைவரையும் கவா்ந்தது. டிஜிட்டல் இந்தியாவின் அறிவியல் வளா்ச்சியை ஆக்கப்பூா்வமான பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டுமென்பதை வி.மு.சத்திரம் ஜெயேந்திரா சிபிஎஸ்இ பள்ளி மாணவா்கள் மிக நுணுக்கமாக செய்து இருந்தனா்.
உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை விளக்கும் விதமாக நடந்த ஜிம்னாஸ்டிக்ஸ் நிகழ்வை பெருமாள்புரம் லலிதா வித்யாஷ்ரம் மாணவா்கள் சிறப்பாக செய்தனா். விழாவில் ஜெயேந்திர பள்ளிக் குழுமங்களின் மாணவா்கள், அவா்களது பெற்றோா்கள் பங்கேற்றனா்.
ஏற்பாடுகளை ஜெயேந்திரா கல்விக் குழுமங்களின் தாளாளா், முதல்வா்- டீன் ஆகியோா் செய்திருந்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...