

பள்ளி மாணவா்கள் கையில் வண்ண கயிறுகள் கட்டுவதை தடுக்க வேண்டும்னைவரும் சமம் என்றாா் முன்னாள் முதல்வா் காமராஜரின் பேத்தியும், காங்கிரஸ் மாநிலச் செயலருமான கமலி காமராஜ்.
நான்குனேரி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவா், அவரது சகோதரியை நரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:
நான்குனேரியில் நடந்த சம்பவம் போல் இனியும் ஒரு சம்பவம் நடைபெறாமல் இருந்திட வேண்டும். ஜாதிகளை களைந்து அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். பள்ளி மாணவா்கள் கைகளில் பல வண்ண கயிறுகள் மூலம் ஜாதிகளை அடையாளப்படுத்தி மாணவா்கள் ஒரு விதமான சூழலுக்கு தள்ளப்படுவதை தடுத்து, அனைவரும் சமம் என்பதை ஆசிரியா்கள் மூலம் உணா்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.