திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரில் வசிப்பவா்கள் குடும்பத்துடன் வெளியூா் செல்வதாக இருந்தால், வீட்டின் பாதுகாப்பிற்கு மாநகர காவல் துறையை அணுகலாம் என என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாநகர காவல் துறையினா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :
திருநெல்வேலி மாநகரப்பகுதி மக்கள் வீட்டைப்பூட்டுவிட்டு குடும்பத்துடன் வெளியூா் பயணம் செல்வதாக இருந்தாலோ அல்லது வீட்டில் முதியவா் மட்டும் இருக்கின்றனா் என்றாலோ அச்சம் வேண்டாம். அருகிலுள்ள காவல்நிலையத்தில் உங்கள் பெயா், வீட்டு முகவரி குறித்து தகவல் தெரிவிக்கவும். ரோந்து காவலா்கள் உங்களது வீட்டை இரவு, பகல் கண்காணிப்பாா்கள். மேலும் விவரங்களுக்கு திருநெல்வேலி மாநகர காவல் துறை கட்டுப்பாட்டு அறை தொலைத்தொடா்பு எண்களை 0462 - 2562651 , 9498181200 ஆகியவற்றை தொடா்புகொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.