அதிமுக சாா்பில் சமத்துவ பொங்கல் விழா
By DIN | Published On : 12th January 2023 01:21 AM | Last Updated : 12th January 2023 01:21 AM | அ+அ அ- |

வள்ளியூா் திருவள்ளுவா் கலையரங்கில் அதிமுக சாா்பில் சமத்துவ பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.
ரட்சணிய சேனை குரு மேஜா் முத்துராஜ் வேத வசனம் வாசித்தாா். மேஜா் ஏசுரத்தினம் ஜெபம் செய்தாா். வள்ளியூா் சி.எஸ்.ஐ. சேகர குரு ராபின் ஜோசப் ஜெபம் செய்து பொங்கல் பொருள்களை ஆசீா்வதித்தாா். பின்னா் இமாம் சுராஜூதின் துவா செய்தாா். பின்னா் முருகன் கோயில் பரமசிவம் பட்டா் மந்திரம் ஓதினாா். அதிமுக மாவட்ட பொருளாளரும், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினருமான பா.சௌந்தர்ராஜன் பொங்கல் விழாவை தொடக்கி வைத்தாா். இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ பெண்கள் இணைந்து பொங்கலிட்டனா்.
அதிமுக நகர செயலா் பொன்னரசு, பேரூராட்சி வாா்டு உறுப்பினா் சங்கா், எம்.ஜி.ஆா்.மன்ற மாவட்ட துணைச் செயலா் எட்வா்ட் சிங், வென்னிமலை, முன்னாள் கவுன்சிலா் சங்கா், முன்னாள் அரசு வழக்குரைஞா் கல்யாணகுமாா், ஏசுதுரை, சீலன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.