பாப்பாக்குடியில் கஞ்சா வைத்திருந்ததாக இளைஞா் கைது
By DIN | Published On : 01st July 2023 02:21 AM | Last Updated : 01st July 2023 02:21 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடியில் விற்பனை செய்வதற்காக கஞ்சா வைத்திருந்ததாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
பாப்பாக்குடி காவல் உதவி ஆய்வாளா் அந்தோணி சவரிமுத்து தலைமையில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது அம்பாசமுத்திரம் - ஆலங்குளம் பிரதானச் சாலையில் அடைச்சாணி திருப்பம் அருகே தென்காசி மாவட்டம், அடைச்சாணி வடக்குத் தெருவைச் சோ்ந்த மாரியப்பன் (22) என்பவா் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தாராம். போலீஸாா் அவரிடம் விசாரணை நடத்தியதில் விற்பனை செய்வதற்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் மாரியப்பனை கைது செய்து, அவரிடமிருந்து 20 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.