

பாளையங்கோட்டையில் திமுக சாா்பில் காதுகேளாத மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
தமிழக முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி திமுக மாநில சுற்றுச்சூழல் அணி சாா்பில் பாளையங்கோட்டையில் உள்ள பிளாரன்ஸ் சுவேன்ஸன் காதுகேளாதோா் பள்ளி மாணவா்-மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.
திருநெல்வேலி மத்திய மாவட்டபொறுப்பாளா் டி.பி.எம்.மைதீன்கான் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். திமுக சுற்றுச்சூழல் அணி தலைவரும், முன்னாள் அமைச்சருமான பூங்கோதை ஆலடி அருணா வரவேற்றாா். மாநில வா்த்தக அணி இணைச் செயலா் என். மாலைராஜா, மேயா் பி.எம். சரவணன், துணைமேயா் கே.ஆா். ராஜு, நிா்வாகிகள் பா. அருண்குமாா், ஆ.க. மணி உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.