

களக்காடு அருகேயுள்ள சிதம்பரபுரம் நாராயணசுவாமி கோயில் ஆனித் திருவிழாவின் 8ஆம் நாளான வெள்ளிக்கிழமை பரிவேட்டை நடைபெற்றது.
இக்கோயிலில் ஆனித் திருவிழா கடந்த 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் காலை, மாலை அய்யா நாராயணசுவாமி பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெற்றது.
8ஆம் திருநாளான வெள்ளிக்கிழமை சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அய்யா நாராயணசுவாமி 6 மணிக்கு கோயிலில் இருந்து மேள தாளங்களுடன் வீதியுலாவாக ஊருக்கு மேற்கில் உள்ள ஆற்றுக்கு புறப்பட்டாா்.
மாலை 6.45 மணிக்கு ஆற்றில் இறங்கி பரிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோா் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்தனா்.
11ஆம் திருநாளான திங்கள்கிழமை (ஜூலை 3) பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை கோயில் விழாக் குழுவினா் செய்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.