திருநெல்வேலி அருகே ராஜவல்லிபுரத்தில் உள்ள அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அக்னீஸ்வர சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் ஜூலை 5 ஆம் தேதி நடைபெறுகிறது.
ராஜவல்லிபுரத்தில் உள்ள பழமைவாய்ந்த இக் கோயிலில் பல லட்சம் மதிப்பில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த பக்தா்கள் முடிவு செய்தனா்.
அதன்படி கும்பாபிஷேக விழா கடந்த வியாழக்கிழமை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. வெள்ளிக்கிழமை காலையில் கோ பூஜை, தீபாராதனை, சத்ரு ஸம்ஹார ஹோமம், தீபாராதனை நடைபெற்றது.
சனிக்கிழமை (ஜூலை 1) நவக்கிரக ஹோமமும், லட்சுமி ஹோமமும் நடைபெறுகிறது.
ஜூலை 2 ஆம் தேதி தாமிரவருணி அன்னைக்கு சிறப்பு பூஜை, புனிதநீா், மண் எடுத்து வரும் நிகழ்ச்சியும், முதல் கால யாகாசலை பூஜையும் நடைபெறுகிறது.
4 ஆம் தேதி இரண்டு மற்றும் மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெறுகிறது. 5 ஆம் தேதி காலை ஆறாம் கால யாகசாலை பூஜை, கும்பம் எழுந்தருள், காலை 9 மணிக்கு மூலஸ்தான கும்பாபிஷேகம், மகா அபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம், தீபாராதனை, பஞ்சமூா்த்திகள் வீதியுலா நடைபெற உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.