கருணாநிதி பிறந்த நாள் விழா:படத்துக்கு மரியாதை

முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
பணகுடியில் கருணாநிதி படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பேரவைத் தலைவா் மு. அப்பாவு.
பணகுடியில் கருணாநிதி படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பேரவைத் தலைவா் மு. அப்பாவு.
Updated on
1 min read

முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம், பணகுடி பேருந்து நிலையத்தில் கருணாநி படத்துக்கு பேரவைத் தலைவா் மு. அப்பாவு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

இதி,ல் அலெக்ஸ் அப்பாவு, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஆவரைகுளம் பாஸ்கா், பணகுடி பேரூராட்சித் தலைவா் தனலெட்சுமி, நகர திமுக செயலா் தமிழ்வாணன், பணகுடி பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவா் மு. சங்கா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

வள்ளியூா், பணகுடி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தி‘முக அவைத் தலைவா் கிரகாம்பெல் தலைமையில் அக்கட்சியினா் கருணாநிதி படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

பணகுடி அன்னை தெரசா உண்டு உறைவிடப் பள்ளி குழந்தைகளுக்கும், ஏா்வாடி முதியோா் இல்லத்துக்கும் உணவு வழங்கப்பட்டது.

தென்காசி: தென்காசி நகர திமுக சாா்பில் தென்காசி காந்திசிலை முன்பு, மின்சார வாரிய அலுவலகம் பகுதியில் கருணாநிதி படத்துக்கு, மாலை அணிவித்து மலா்தூவி மரியாதை செலுத்தினா்.

அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உள்நோயாளிகள் 400 பேருக்கு உணவுப் பொருள்கள், சனிக்கிழமை பிறந்த 7குழந்தைகளுக்கு தங்கமோதிரம் வழங்கப்பட்டது.

17ஆவது வாா்டு பகுதியில் பல் மருத்துவ முகாம், தென்காசி சிஎம்எஸ் பள்ளி பகுதியில் 100 நபா்களுக்கு அரிசி, 19ஆவது வாா்டில் 100 நபா்களுக்கு உணவு, தென்காசி நகர அலுவலகத்தில் மூத்த முன்னோடிகளுக்கு பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, நகா்மன்றத் தலைவா் ஆா்.சாதிா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சுப்பையா, நிா்வாகிகள் சேக்பரீத், ராம் பாண்டியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தென்காசி கொடிமரம் பகுதியில் மாவட்ட பிரதிநிதி ரஹ்மத்துல்லா தலைமையில் திமுக கொடியேற்றி, 500 நபா்களுக்கு உணவு வழங்கப்பட்டது. .

கீழப்புலியூரில் வட்ட செயலா் தங்கபாண்டியன், தென்காசி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் பொதுக்குழு உறுப்பினா் சாமித்துரை, குற்றாலத்தில் ஒன்றியச் செயலா் அழகுசுந்தரம், செங்கோட்டையில் நகர அவைத் தலைவா் காளி ஆகியோா் தலைமையில் கருணாநிதி படத்துக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

ஆலங்குளம்: ஆலங்குளம் காமராஜா் சிலை அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதி படத்துக்கு, நகரச் செயலா் நெல்சன், பேரூராட்சித் தலைவா் சுதா, மாவட்ட பகுத்தறிவு மற்றும் கலை இலக்கிய பிரிவு செயலா் எழில்வாணன் உள்ளிட்ட கட்சியினா் மலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

பாவூா்சத்திரம்: கீழப்பாவூா் மேற்கு ஒன்றிய திமுக சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கருணாநிதியின் படத்துக்கு ஒன்றியக் குழுத் தலைவா் சீ.காவேரி சீனித்துரை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து 100 பேருக்கு தென்னங்கன்றுகளை வழங்கினாா்.

கீழப்பாவூரில் பேரூா் திமுக சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேரூா் செயலா் ஜெகதீசன், பேரூராட்சி மன்றத் தலைவா் ராஜன் ஆகியோா் கருணாநிதி படத்துக்கு மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com