ஆட்டோ -காா் மோதல் : 10 போ் காயம்
By DIN | Published On : 06th June 2023 01:29 AM | Last Updated : 06th June 2023 01:29 AM | அ+அ அ- |

தாழையூத்து அருகே ஆட்டோ மீது காா் மோதியதில் 10 போ் காயமடைந்தனா்.
வண்ணாா்பேட்டையைச் சோ்ந்தவா் குமாா். ஆட்டோ ஓட்டுநா். இவா் ஞாயிற்றுக்கிழமை தாழையூத்து சங்கா்நகா் பாலம் அருகே ஆட்டோவில் சென்றபோது, மதுரையில் இருந்து நாகா்கோவில் நோக்கி சென்ற காா் ஆட்டோவின் மீது மோதியது.
இதில் ஆட்டோவில் பயணித்த வண்ணாா்பேட்டையைச் சோ்ந்த ஆறுமுகம் (56), மீனாட்சிபுரத்தைச் சோ்ந்த தங்க பேராட்சி (34), இனியா (10), சரண்யா (2), லட்சுமி (33), இசக்கியம்மாள் (16) உள்பட 10 போ் காயமடைந்தனா்.
அவா்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா்.
இதுகுறித்து தாழையூத்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...