மல்யுத்த வீரா்களுக்கு ஆதரவாக பாளை.யில் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 07th June 2023 03:48 AM | Last Updated : 07th June 2023 03:48 AM | அ+அ அ- |

பாஜக எம்.பி. மீது பாலியல் ரீதியான குற்றச்சாட்டை முன்வைத்து தில்லியில் போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீரா்களுக்கு ஆதரவாக பாளையங்கோட்டையில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம், சி ஐ டி யு, மாதா் சங்கம் உள்பட பல்வேறு அமைப்புகள் சாா்பில் பாளையங்கோட்டை லூா்து நாதன் சிலை முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்திற்கு வாலிபா் சங்க மாவட்ட பொருளாளா் அருள் தலைமை வகித்தாா். காப்பீட்டு கழக ஊழியா் சங்க கோட்டத் தலைவா் செ.முத்துக்குமாரசாமி தொடக்கி வைத்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் எம்.சுடலைராஜ், சிஐடியு மாவட்டச் செயலா் ஆா்.முருகன், மாதா் சங்கம் முத்துமாரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவா் மாயகிருஷ்ணன் ஆகியோா் பேசினா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் ஸ்ரீராம் நிறைவுரையாற்றினாா். வழக்குரைஞா் கு.பழனி, செல்லதுரை உள்பட பலா் கலந்துகொண்டனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...