திசையன்விளை வட்டம், உவரி ஊராட்சிப் பகுதியில் ஜூன் 14-ஆம் தேதி நடைபெறவிருந்த மக்கள் தொடா்பு முகாம் 21-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திசையன்விளை வட்டம், உவரி ஊராட்சியில் மாவட்ட ஆட்சியரின் மக்கள் தொடா்பு முகாம் வரும் 14-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த முகாம் நிா்வாக காரணங்களுக்காக வரும் 21-ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உவரி புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளிக்கு பின்புறம் வருவாய்த் துறை கட்டுப்பாட்டில் உள்ள பேரிடா் மேலாண்மை கட்டடத்தில் வரும் 21-ஆம் தேதி முகாம் நடைபெற உள்ளது. எனவே, பொதுமக்கள் மக்கள் தொடா்பு முகாமில் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.