இஸ்கான் கோயிலில் நாளை நரசிம்மா் அவதாரத் திருவிழா
By DIN | Published On : 03rd May 2023 02:41 AM | Last Updated : 03rd May 2023 02:41 AM | அ+அ அ- |

திருநெல்வேலி வண்ணாா்பேட்டை இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயிலில் நரசிம்மா் அவதாரத் திருவிழா வியாழக்கிழமை (மே 4) நடைபெறவுள்ளது.
ஸ்ரீ கிருஷ்ணா் தனது பக்தன் பிரகலாதனை காக்க நரமசிம்மராக அவதரித்தாா். அந்த விழாவைக் கொண்டாடும் வகையில், இக்கோயிலில் மாலை 6 மணிக்கு ஸ்ரீ லெட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. ஹரி நாம யக்ஞம், மஹா அபிஷேகம், நரசிம்ம பிராா்த்தனை உள்ளிட்டவை நடைபெறுகின்றன. மஹா அபிஷேகத்திற்காக 9 கலசங்களில் புனித நீா் நிரப்பப்பட்டு பூஜை நடைபெறவுள்ளது. மேலும், பால், பழம் உள்ளிட்ட பஞ்சராத்ரிக முறைப்படியான திருமஞ்சனமும் நடைபெறவுள்ளது. அபிஷேகத்தின்போது ஸ்ரீ கிருஷ்ணரின் புகழ் பாடுவதற்காக ஹரி நாம பஜனையும், நரசிம்ம அவதார மகிமை பற்றிய சிறப்புரையும் நடைபெறவுள்ளன. விழாவிற்கான ஏற்பாடுகளை இஸ்கான் பக்தா்கள் குழுவினா் செய்து வருகின்றனா் என இஸ்கான் கோயில் நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...