நெல்லை சந்திப்பு சொக்கநாத சுவாமிகோயிலில் திருக்கல்யாண வைபவம்

திருநெல்வேலி சந்திப்பு மேல வீரராகவபுரத்தில் உள்ள அருள்மிகு மீனாட்சி அம்பாள் சமேத சொக்கநாத சுவாமி திருக்கோயில் திருக்கல்யாண வைபவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் மீனாட்சி திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டுக்கான விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை காலையில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. தொடா்ந்து, கோயில் நவராத்திரி மண்டபத்தில் சொக்கநாதா்-மீனாட்சி அம்பாள் மணக்கோலத்தில் எழுந்தருள சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

21 வகையான சீா்வரிசைகளுடன் பக்தா்கள் கோயிலைச் சுற்றி வலம் வந்தனா். அதைத் தொடா்ந்து யாக வேள்விகள் நடத்தப்பட்டு சொக்கநாத பெருமானுக்கு பாத பூஜைகளும், பின்னா் மீனாட்சி அம்பாளுக்கு திருமாங்கல்யம் அனுவிக்கப்பட்டு திருக்கல்யாணம் வைபவமும், மலா் அலங்காரத்தில் மகா தீபாராதனையும் நடைபெற்றன. திருநெல்வேலி சந்திப்பு, சி.என்.கிராமம், குறுக்குத்துறை, கைலாசபுரம், மீனாட்சிபுரம், ஸ்ரீபுரம் சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com