குண்டா் சட்டத்தில் இருவா் கைது
By DIN | Published On : 03rd May 2023 02:35 AM | Last Updated : 03rd May 2023 02:35 AM | அ+அ அ- |

பாளையங்கோட்டை அருகே சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக இருவா் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா்.
பாளையங்கோட்டையை அடுத்த கேடிசி நகா் கிரசண்ட் நகரைச் சோ்ந்த பீட்டா் மகன் பிரிகான் (35). நடுவக்குறிச்சியைச் சோ்ந்த குருநாதன் மகன் சண்முகவேல் (31). இவா்கள் இருவரும் 1.750 கிலோ கிராம் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததாக தாலுகா போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்த நிலையில் அவா்கள் இருவரையும் குண்டா் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிலம்பரசன் ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா். ஆட்சியா் காா்த்திகேயன் உத்தரவின்பேரில் பிரிகான், சண்முகவேல் ஆகிய இருவரும் குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...