சித்ரா பெளா்ணமியை முன்னிட்டு கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனமும், நிா்மால்ய பூஜையும் நடைபெற்றது. காலை 6 மணிக்கு தீபாராதனை, காலை 8 மணிக்கு ஸ்ரீபலி பூஜை, பந்திரடி பூஜை, உஷ பூஜை ஆகியன நடைபெற்றன. காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பின்னா் வைரக் கிரீடம், வைரக்கல் மூக்குத்தி அணிவிக்கப்பட்டு சந்தனக்காப்பு அலங்காரம் நடைபெற்றது.
முற்பகல் 11.30 மணிக்கு உச்சிகால அலங்கார தீபாராதனை, பிற்பகல் 12 மணிக்கு அன்னதானம், மாலை 6 மணிக்கு சாயரட்ஷை தீபாராதனை, இரவு 7.30 மணிக்கு புஷ்பாபிஷேகம், இரவு 8 மணிக்கு தீபாராதனை, இரவு 8.15 மணிக்கு கோயில் உள்பிரகாரத்தில் அம்மன் பவனி வருதல், வெள்ளி சிம்மாசனத்தில் அம்மனுக்கு தாலாட்டு, அத்தாழ பூஜை, ஏகாந்த தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.