பாளையங்கோட்டை மண்டலத்தில் இரு நாள்கள் குடிநீா் விநியோகம் நிறுத்தம்
By DIN | Published On : 12th May 2023 12:00 AM | Last Updated : 12th May 2023 12:00 AM | அ+அ அ- |

பாளையங்கோட்டை மண்டலத்தில் இம் மாதம் 13, 14 ஆம் தேதிகளில் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
இதுதொடா்பாக திருநெல்வேலி மாநகராட்சி சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாநகராட்சி, பாளையங்கோட்டை மண்டலத்திற்குள்பட்ட மணப்படைவீடு புதிய தலைமை நீரேற்று நிலையத்தில் பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் புதிய வால்வுகள் பொருத்தும் பணி மற்றும் இதர பராமரிப்பு பணிகள் சனிக்கிழமை (மே 13) நடைபெற உள்ளன. இந்த நாளில் மணப்படைவீடு நீரேற்று நிலையத்தை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஆகவே, இம் மாதம் 13, 14 ஆம் தேதிகளில் பாளையங்கோட்டை மண்டலத்திற்குள்பட்ட வாா்டு எண்கள் 6 முதல் 9, வாா்டு எண்கள் 32 முதல் 36, வாா்டு எண் 39 ஆகிய பகுதிகளுக்கு குடிநீா் விநியோகம் நிறுத்தப்படுகிறது.பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.