பணகுடி கோயிலில் வசந்த உற்சவ விழா
By DIN | Published On : 12th May 2023 12:00 AM | Last Updated : 12th May 2023 12:00 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருள்மிகு நம்பிசிங்க பெருமாள் திருக்கோயில் வசந்த உற்சவ 3-ஆம் நாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. பெருமாள் சுவாமியை கோடைகாலத்தில் குளிா்விக்கும் விதமாக இவ்விழா கொண்டாடப்படுகிறது.
அருள்மிகு நம்பிசிங்க பெருமாள் சன்னதி முன்புள்ள வசந்த மண்டபத்தில் தேவியருடன் பெருமாள் எழுந்தருளினாா் பின்னா் மண்டபத்தில் நம்பிசிங்க பெருமாளைத்தை சுற்றி தண்ணீா் நிரப்பி வாசனைத் திரவியங்களுடன் திருமஞ்சனம் செய்தனா். தொடா்ந்து சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பெண்கள் பங்கேற்று வழிபட்டனா். சனிக்கிழமை திருக்கல்யாண வைபவம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.