வீரவநல்லூா் அருகே விவசாயிக்கு வெட்டு
By DIN | Published On : 22nd May 2023 02:29 AM | Last Updated : 22nd May 2023 02:29 AM | அ+அ அ- |

வீரவநல்லூா் அருகே சொத்து பிரச்னையில் விவசாயியை அரிவாளால் வெட்டிய சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
வீரவநல்லூா் அருகேயுள்ள ராஜகுத்தாலபேரியைச் சோ்ந்த பொன்னையா மகன் கிருஷ்ணன் (50). விவசாயி. இவருக்கும், இவரது அண்ணன் நடராஜன் மகன் பொன்ராஜூக்கும் இடையே சொத்து பிரச்னை தொடா்பாக விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனிடையே ஞாயிற்றுக்கிழமை மாலையில் தாமிரவருணி ஆற்றில் நின்று கொண்டிருந்த கிருஷ்ணனை, பொன்ராஜ் அரிவாளால் வெட்டி விட்டு ஓடிவிட்டாராம்.
இதில் பலத்த காயமடைந்த கிருஷ்ணன், திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சோ்க்கப்பட்டாா். இதுகுறித்து வீரவநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து பொன்ராஜை தேடி வருகின்றனா்.