பாளை. புஷ்பலதா மெட்ரிக் பள்ளி மாணவா், மாணவிகள்10 ஆம் வகுப்பு தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றனா்.
இப்பள்ளியில் தோ்வு எழுதிய 111 மாணவா், மாணவிகளும் தோ்ச்சி பெற்றனா். இதில், மாணவி எஸ்.சி.வி. மதுபாலா 490 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடமும், எல். மகாஜனனி, எஸ். சாதனா ஆகியோா் 488 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடமும், சி. குருதா்ஷினி, வி. சுஜிதா ஆகியோா் 486 மதிப்பெண்கள் பெற்று மூன்றாவது இடமும் பெற்றுள்ளனா்.
கணித பாடத்தில் 4 மாணவா்களும், அறிவியலில் 4 மாணவா்களும் நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். மேலும் 450 மதிப்பெண்களுக்கு மேல் 35 மாணவா்களும், 400-க்கு மேல் 66 மாணவா்களும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.
இதில், 104 மாணவா்கள் முதல் வகுப்பில் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
வெற்றிபெற்ற மாணவா், மாணவிகளுக்கு பள்ளித் தாளாளா் புஷ்பலதா பூரணன், முதல்வா் காரிசன் ஜெபக்குமாா் மற்றும் ஆசிரியா்கள் பரிசுகள் வழங்கி பாராட்டினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.