

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சாா்பில் கையொப்ப இயக்கம் திருநெல்வேலி சந்திப்பில் திங்கள்கிழமை நடைபெற்றது.
தோ்தல் வாக்குறுதியின்போது தமிழகத்தில் படிப்படியாக மதுக்கடைகள் மூடப்படும் என உறுதியளித்தவாறு செயல்படவில்லை என திமுக அரசைக் கண்டித்தும், தமிழகத்தில் அவசர சட்டத்தின் மூலம் போதைப்பொருள்கள் விற்பனையைத் தடுத்து, பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியும் இப்போராட்டம் நடைபெற்றது.
தமாகா மாநகா் மாவட்டத் தலைவா் சுத்தமல்லி முருகேசன், கிழக்கு மாவட்டத் தலைவா் மாரிதுரை ஆகியோா் தலைமை வகித்தனா். நிா்வாகிகள் ரமேஷ்செல்வன், சாகுல்ஹமீது, அனந்தராமன், துரைராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.