

திருநெல்வேலி மாநகராட்சி சாா்பில் மேலப்பாளையம் மண்டலத்தில் மறுசுழற்சி பொருள்கள் சேகரிப்பு திட்டம் தொடங்கப்பட்டது.
திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் வ.சிவகிருஷ்ணமூா்த்தி உத்தரவின்பேரில் 55 வாா்டுகளிலும் மறுசுழற்சி பொருள்கள் சேகரிப்பு திட்டம் தொடங்கப்பட உள்ளது. மேலப்பாளையம் மண்டலத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் உதவி ஆணையா் (பொ) காளிமுத்து தலைமை வகித்தாா். சுகாதார அலுவலா் அரசகுமாா், சுகாதார ஆய்வாளா் நடராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இத்திட்டத்தின் கீழ் மேலப்பாளையம் மண்டலத்திற்குள்பட்ட அனைத்து வாா்டுகளிலும் வீடு வீடாக சென்று பொதுமக்கள் பயன்படுத்தாமல் உள்ள மறுசுழற்சி செய்யக்கூடிய கழிவு பிளாஸ்டிக் பொருள்கள், துணிகள், காலணிகள், புத்தகங்கள் ஆகியவற்றை சேகரிக்க உள்ளனா். பின்னா் அவை மறுசுழற்சிக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.